ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > புகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் பாடல்கள். பாடல்களுக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். இசைஞானி இளையாராஜா தொடக்கி வைத்த அந்த கலாச்சரம் இன்றும் பெரும்பாலான படங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

அந்தவகையில் 2018-ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய சிறந்த 20 பாடல்களை அநேகன் பட்டியலிட்டிருக்கிறது.

 

1. பாடல் : சொடக்கு மேலே
தானா சேர்ந்த

படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பள்ளி – கல்லூரி ஆண்டு விழாக்களில், திருமண கொண்டாட்டங்களில் தவறாமல் இடம் பிடித்து அனைவரையும் ஆட்டம் போட வைத்தது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது.

 

2. பாடல் – குலேபா
படம் – குலேபகாவலி

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற அடைமொழிக்கு இன்றளவும் நியாயம் செய்து வருகிறார் பிரபுதேவா. அந்தவகையில் துள்ளலும், ஆட்டமும், உற்சாகமும் ஒருங்கே கரம்கோர்த்த பாடலாக அமைந்தது குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற குலேபா. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்ட பெருமையும் இதற்கு உண்டு.

 

3. பாடல் – எப்போதும் உன் மேல் ஞாபகம்
படம் – நிமிர்

ரம்மியமான காதல் இசை. இயல்பான வரிகள். ஒரு முறை கேட்டபோதும் மறுமுறை கேட்கத் தூண்டும் பாடல். பாடல்களுக்கு தர்புகா சிவாவும், அஜனேஷ் லோக்நாத்தும் பின்னணி இசைக்கு ரோனி ரபேலும் அலட்டல் இல்லாத இசையை கொடுத்துள்ளனர்.

 

4. பாடல் : ஒரு குச்சி ஒரு குல்ஃபி
படம் : கலகலப்பு 2

சுந்தர் சியின் கலகலப்பான பாடல் இது. கலர்ஃபுல் கார்னிவெல் சினிமாவுக்கு இசை ரொம்ப முக்கியமானது. அதனை இந்த பாடல் நிறைவு செய்தது. இந்த பாடல் இல்லாமல் எந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நிறைவாகாது என்று சொல்ல வைத்த பாடல். ஹிப்பாப் தமிழாவின் வெற்றிப் பாடல்களில் இதுவும் ஒன்று.

 

5. பாடல் : உயிர் உருவாத
படம் : இரவுக்கு ஆயிரம் கண்கள்

பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கும் சாம் சி.எஸ்., பாடல்களுக்கும் அதே அளவுக்கு மெனக்கெட்டிருக்கலாம் என்று நினைக்கையில். அவரின் இந்த காதல் பாடல் முனுமுக்க வைக்கும் ரம்மியமான ரகம். நிறைய காதலர்களின் கைப்பேசியில் அதிகம் ஒலித்த பாடல்.

 

6. பாடல் – குறும்பா
படம் – டிக் டிக் டிக்

தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள உறவையும், பிள்ளையின் குறும்பை உச்சி முகர்ந்து கொண்டாடும் தந்தையின் மனநிலையையும் படம்பிடித்து காட்டியது குறும்பா பாடல். தாய் பாசத்திற்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ள நிலையில், தந்தையின் பாசத்தை எடுத்துச் சொல்ல வந்துள்ள இந்த பாடல் அப்ளாசை அள்ளியது.

 

7. பாடல் – கண்ணம்மா கண்ணம்மா
படம் – காலா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் இடம்பெற்ற மனதை வரும் மெலோடி பாடல் தான் கண்ணம்மா கண்ணம்மா. பதின்ம வயதின் காதலியை நடுத்தர வயதில் சந்திக்கும் போது ஏற்படும் மெல்லிய தடுமாற்றத்தையும் முதிர்ச்சி அடைந்த பக்குவத்தையும் சமவிகதத்தில் கலந்து எழுதப்பட்டு – எடுக்கப்பட்ட இந்த கண்ணம்மா ஆண் – பெண் எல்லா பாலினரையும் கவர்ந்தததில் வியப்பேதும் இல்லை.

 

8. பாடல் – நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு
படம் – இமைக்கா நொடிகள்

த்ரில்லர் படத்தில் இப்படி ஒரு மென்மையான பாடலா என்று வியக்கும் அளவுக்கு இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெற்றது நீயும் நானும் அன்பே கைகள் கோர்த்துக் கொண்டு என்ற பாடல். அன்பின் நெகிழ்வை, திருமண உறவின் அழகை, பிரிவின் துயரத்தை வடித்த விதத்தில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது இப்பாடல்.

9. படம் – கோலமாவு கோகிலா
பாடல் – எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு

சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்து பாடிய எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு என்ற பாடல் ஒலிக்காத மொபைல் போன்களே இல்லை எனலாம். யோகிபாபுவின் நடிப்பு, நயன்தாரவின் அழகு, இளைஞர்களை கவரும் இசைக்கோர்வை என இந்த பாடல் இசைப்பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தது.

 

10. பாடல் – உன்னை விட்டா யாரும் எனக்கில்ல
படம் – சீமராஜா

சிவகார்த்திகேயன் சமந்தா ஜோடி நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ, இதில் இடம்பெற்ற உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாடல் காதலர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. பண்பலை வானொலிகளில் தவறாமல் இடம் பிடித்து இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட்டில் அமர்ந்து கொண்டான் இந்த சீமராஜா.

11. பாடல் – மலைக் குருவி
படம் செக்க சிவந்த வானம்

மணிரத்தினம் ஏ.ஆர் ரஹமான் கூட்டணியில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக காதல் மற்றும் காதலியின் உணர்வுகளை இசையோடு கோர்த்து கொடுத்த ரஹமானின் குரலில் இந்த இசை காந்தம், கேட்க கேட்க பிடிக்கும் ரகம்.

12. பாடல் – காதலே காதலே
படம் – 96

இளைஞர்களின் தேசிய கீதமாக மாறிப்போன பாடலாக அமைந்துவிட்டது 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடல். படமும், நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் என ஒட்டுமொத்த கலவையாக அனைவரையும் ஆட்கொண்டு விட்டது இந்த பாடல்.

13. படம் – வடசென்னை
பாடல் – என்னடி மாயாவி நீ

அதிரடி இசைக்கருவிகள் இல்லாமல் குரலையே குழைத்து உருவாக்கப்பட்ட என்னடி மாயாவி நீ என்ற வடசென்னை படத்தில் இடம்பெற்ற பாடல், பலரின் ரிங்டோனாக இடம்பெற்றுள்ளது. அதிலும் அந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் கவித்துவம் மிக்கவையாக உள்ளன. உப்புக் காற்றில் இது பன்னீர் காலமா என்று மீனவ மண்ணின் வாழ்க்கையில் மலர்ந்த காதலை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாத அளவுக்கு எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா.

 

14. பாடல் : சிம்டாகாரன்
படம் : சர்கார்

உதயாவில் தொடங்கிய ஏ.ஆர் ரஹமான் விஜய் கூட்டணி, அதனை அடுத்து அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் வரை வெற்றிப் பாடல்களையே கொடுத்திருக்கிறது. இந்த பாடலின் வார்த்தைளின் முதலில் இருந்து விளங்க முடியாமல் போயி சிரிப்பை வரவழைத்தாலும் வழக்கம் போல ரஹமானின் மெட்டு கேட்க கேட்க பிடிக்கும் ரகம் . விஜய் ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பாடல்.

 

15. பாடல் : ராஜாளி
படம் : 2.0

2017- ஆம் ஆண்டிலேயே 2.0 படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், படம் இந்த ஆண்டில் வெளிவந்திருப்பதால், ராஜாளி பாடல் ரசிகர்களைக் கவர்ந்த பாடலாக அமைந்தது. அதேவேளையில் நா. முத்துகுமார் எழுதிய புல்லினங்கால் பாடல், ரஹ்மான் இசையில் வித்தியசமான ஒரு பாடலாக வெளிவந்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

 

16. பாடல் : வாயாடி பெத்த புள்ள
படம் : கனா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி பெத்த புள்ள என்ற இந்த பாடல், படம் வெளிவருவதற்கு முன்பே 5 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்தனர். குறிப்பாக சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, வைக்கம் விஜயலட்சுமி இணைந்து பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

17. பாடல் : ரெளடி பேபி
படம் : மாரி

2018 ஆம் ஆண்டில் யுவன் ஷங்கர் ராஜாவின் காம் பேக் ஆண்டு என்ற சொல்லக்கூடிய ஆண்டாகும். பியார் பிரேமம் காதல், மூலம் இளைஞர்களின் மனதை வருடிய யுவன், ஆண்டு இறுதியில் ரெளடி பேபி பாடல் மூலம் தன்னுடைய பழைய பார்மூக்கு திரும்பினார். இன்று எந்த பயணமும் இந்த பாடலின்றி இனியாவதில்லை.

 

18. பாடல் : மரண மாஸ்
படம் : பேட்ட

சூப்பர் ஸ்டார் படத்துக்கு இசையமைக்க வேண்டும் அனிருத்தின் ஆசை பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது. ஒரு ரஜினி ரசிகராக , ஓப்பனிங் பாடலை மரண மாசாக தர வேண்டும் என்ற நோக்கத்தில அதையே முதல் வரியாக ஆக்கி, அனிருத் பாடிய மரண மாஸ் படல், 2018 ஆம் ஆண்டில் இணையத்தை அதிர வைத்தது. இந்த படம் அடுத்த பொங்கலுக்கு வருகிறது என்றாலும் பாடல்க:ள் முன்பே வந்தது பட்டையை கிளப்பி இருக்கிறது.

 

19. பாடல் : ஏய் பெண்ணே
படம் : பியார் பிரேம்

இளசுகளின் மனதை ரம்மியமாக்கும் இசையுடன் யுவன் ராஜ்ஜியம் நடத்திய படம் பியார் பிரேமம் காதல்,…ரொமான்டிக்கு பாடல்கள் வரிசையில் சிட் சஶ்ரீராம் பாடிய ஏய் பெண்ணே பாடல், 2018 ஆம் ஆண்டில் பலரின் மனதைக் கொள்ளைக் கொண்ட பாடல்களின் ஒன்றாகும்.

 

20. பாடல் : கண்ணான கண்ணே
விசுவாசம்

தல அஜித்துக்கு இமான் முதல் முறையாக இசையமத்தை வேளையில் சிட் ஶ்ரீராம் குரலில் வெளிவந்த கண்ணான கண்ணே பாடல், ஒரு தந்தை குழந்தைக்கு தாலாட்டு பாடலாக அமைந்தது. என்னை அறிந்தால் படத்தில் இடம் [பெற்ற உனக்கென்ன வேணும் பாடலைப் போலவே அஜித் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. வரிகளாலும் இசையாலும் இந்த பாடல் அழகு பெற்றிருக்கிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றாலும் பாடல் இந்த ஆண்டிலே வந்ததால் பிரபல பட்டியலில் சேர்த்துகொள்ளப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன