திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் > மலேசியா கடந்து வந்த பாதை 2018…!
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மலேசியா கடந்து வந்த பாதை 2018…!

மலேசிய நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை காணாத மாபெரும் அரசியல் சூறாவளியை இந்த ஆண்டில் கண்டிருக்கிறது.  61 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்துடன் நாடு கடந்து வந்த பாதையை அநேகன் ஒரு கண்ணோட்டமிடுகிறது.

 

 

ஜனவரி

1. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது

2. இருமொழி பாடத்திட்டத்திற்கு தடை

3. மலேசிய இந்திய சமுதாயத்திற்கு 150 கோடி பங்குகள். ஜனவரி 29 முதல் அமலாக்கம்.

 

பிப்ரவரி

1. பினாங்கில் தற்கொலை முயற்சி செய்துகொண்ட மாணவி வசந்தபிரியா உயிர் இழந்தார். ஆசிரியர் மீது குற்றச்சாட்டு.

2. முன்னாள் கோல்கீப்பர் டத்தோ எஸ் ஆறுமுகம் பெயர் கிள்ளான் பாடாங் பெக்கிலீலீங் அரங்கத்திற்கு சூட்டப்பட்டது.

3. இபிஎப் கட்டடம் தீப்பிடித்துக்கொண்டது.

4. கெடா, பாயா பெசார் தமிழ்ப்பள்ளிக்கு தமிழவேள் கோ சாரங்கபாணி பெயர் வைக்கப்பட்டது.

மார்ச்

1. நம்பிக்கை கூட்டணி ஆட்சியை பிடித்தால், நானே பிரதமர் ஆவேன் – துன் மகாதீர்

2. இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்கு 100 நாட்களில் தீர்வு – நம்பிக்கை கூட்டணி

3. இந்தியர்களுக்கும் பெல்கிரா திட்டம் – துன் மகாதீர்

4. மலேசிய காற்பந்து சங்கத் தலைவர் பதவியிலிருந்து ஜோகூர் இளவரசர் விலகல்

ஏப்ரல்

1. 85 விழுகாட்டு மக்கள் வாக்களித்தால் ஆட்சி மாற்றம் உண்டு – துன் மகாதீர்

2. நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை பிரகடனம்

3. மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு

4. நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் கெஅடிலான் சின்னத்தில் போட்டி –

5. கெலிங் என்ற வார்த்தையை பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் துன் மகாதீர்

6. ஏப்ரல் 28 வேட்புமனு தாக்கல்

மே

1. அம்னோவில் இருந்து, துன் டாயிம் ரபிடா அசிஸ் நீக்கம்

2. 61 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய முன்னணியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி, நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் புதிய ஆட்சியை நிறுவியது.

3. நடந்த14-வது பொதுத் தேர்தலில் 222 நாடாளுமன்ற தொகுதிகளில், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 135 நாடாளுமன்ற தொகுதிகளை வெற்றிப் பெற்று, மலேசிய வரலாற்றில் பெரும் சாதனையைப் படைத்தது.

4. டத்தோஶ்ரீ வான் அசிசா துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் முதல் பெண் துணைப்பிரதமர் என்று சாதனையைப் படைத்திருக்கிறார்.

5. டத்தோஶ்ரீ நஜிப் இல்லம் சுற்றி வளைப்பு

6. முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தால், ஓரிணப்புணர்ச்சி வழக்கு தொடுக்கப்பட்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த மே 16 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

ஜூன்

1. இந்திய வியூக பெருந்திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் – அமைச்சர் குலசேகரன்

2. சட்டத் துறை தலைவராக டோமி தோமஸ் – துன் மகாதீர்ட் அறிவிப்பு

3. அன்வாரே நாட்டின் எட்டாவது பிரதமர் அறிவிப்பு

4. சரவா தேசிய முன்னணி கூண்டோடு கலைப்பு

5. தேமுவில் இருந்து விலகியது கெராக்கான்

6. இந்து ஆகம அணியால் பத்துமலையில் நிலவரம் கலவரம்

7. அம்னோவின் வங்கி கணக்கு முடக்கம்

ஜூலை

1. மக்களைவியில் 4 இந்திய அமைச்சர்கள்

2. முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் கைதாகி, 10 லட்சம் ஜாமினில் விடுதலை

3. எம்பிக்கள் சொத்து கணக்குகள் காட்ட ஆணை

4. மஇகாவின் 10வது தேசிய தலைவரானார் டான் ஶ்ரீ எஸ் விக்கினேஸ்வரன்

ஆகஸ்டு

1. ஜிஎஸ்டியின் 1800 ரிங்கிட் களவாடப்பட்டதா? – எம்பி மீது புகார்

2.சிவப்பு மைகாட் வைத்துள்ள 3407 இந்தியர்களுக்கு குடியுரிமை

3. ஜோலோவின் கப்பல் கைப்பற்றல்

4. மூத்த பத்திரிக்கையாளர் எம் துரைராஜ் மரணம்

5. நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் காலமானார்

செப்டம்பர்

1. அமலுக்கு வந்ததது எஸ்.எஸ்.டி

2. உணவகங்களுக்கு எஸ்.எஸ்.டி வரி நீக்கம் அரசாங்கம் அறிவிப்பு

3. கெஅடிலான் தேர்தலில் அடிதடி- கைகலப்பு

4. தேசிய முன்னணி கலைத்து விடுங்கள் -மசீசா

5. தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் நேரடியாக பள்ளிகளுக்கே கொடுக்கப்படும் – கல்வி அமைச்சு

6. சுங்கை காண்டிஸ், ஶ்ரீ செத்தியா மற்றும் பாலாங்கோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதியிலும் முறையே நாட்டில் இதுவரை, நான்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

அக்டோபர்

1. டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் கைது

2. ஜோலோவின் இக்குனிமினிட்டி கப்பல் ஏலம்

3. பின்னர், கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்ற போர்ட் டிக்சன் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, அக்டோபர் 15 ஆம் தேதி அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

4. முன்னாள் துணை பிரதமர் டாக்டர் ஜாஹிட் ஹமிடி கைது

5. மஇகா தேசியத் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி

நவம்பர்

1. நம்பிக்கை கூட்டணியின் வரவு செலவு திட்டம் தாக்கல், இந்திய சமுதாய்த்திற்கு 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

2. சபா மாநில முதல்வரானர் ஷாபி அப்டால்

3. கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரானார் அஸ்மின் அலி

4. சுபாங் ஜெயா, சீபில்ட் கோவிலில் குண்டர் கும்பல் தாக்குதல்

5. சீபில்ட் ஆலயம் உடைபடாது – வேதமூர்த்தி உறுதி

6. வழிபாட்டு தளங்களுக்கு புதிய சட்டம் – துன் மகாதீர்

 

டிசம்பர்

1. கேமரன்மலை நாடாளுமன்ற தேர்தல் செல்லாது

2. மீண்டும் சொஸ்மா – பொடா – பொகா- சட்டம்

3. சீபில்ட் கோவில் வன்முறை 58 பேர் தடுப்பு

4. நாடாளுமன்றத்தில் சிவராஜுக்கு அனுமதி இல்லை.

5. தலைநகரி ஐசெர்ட் பேரணி

6. 1எம்டிபி தலைமை செயல்முறை அதிகாரி அருள்கந்தா கைது

7. அம்னோவில் இருந்து 6 எம்பிக்கள் விலகல்

8. கெஅடிலான் உதவித் தலைவர் பதவியில் இருந்து நூருல் இசா விலகல்

9. சீபில்ட் கோவில் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் அடிப் மரணம்

10. அமைச்சர் வேதமூர்த்திக்கு எதிர்ப்பு ஒரு புறம் ஆதரவு மறுபுறம்

11. கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சி சிவராஜ் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் தடை – மஇகா எதிர்த்து மேல் முறையீடு

12. பெர்சத்து கட்சியின் இரண்டாவது பேராளர் மாநாடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன