வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதுப் பட்டியலில் மீண்டும் சாலா, மானே, அவ்பாமேயாங் !
விளையாட்டு

ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதுப் பட்டியலில் மீண்டும் சாலா, மானே, அவ்பாமேயாங் !

டாக்கார், ஜன.2 –

2018 ஆம் ஆண்டுக்கான ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த காற்பந்து ஆட்டக்காரருக்கான விருதுப் பட்டியலில் லிவர்பூல் கிளப்பின் முஹமட் சாலா  மீண்டும் இடம்பெற்றிருக்கிறார். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இறுதி மூன்று ஆட்டக்காரர்களுக்கான பட்டியலில், லிவர்பூலின் மற்றொரு ஆட்டக்காரரான சாடியோ மானே, அர்செனலின் பியேரி எமெரிக் அவ்பாமேயாங்கும் இடம்பெற்றிருக்கின்றனர்.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி செனகலின் டாக்கார் நகரில் நடைபெறவிருக்கும் விருதளிப்பு விழாவில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட விருக்கிறது. முதல் கட்டமாக 34 ஆட்டக்காரர்கள், விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வேளையில், இறுதி மூன்று ஆட்டக்காரர்களின் பெயரை, ஆப்ரிக்க காற்பந்து சம்மேளனம் செவ்வாய்கிழமை வெளியிட்டது.

ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த ஆட்டக்காரர் விருதை கடந்த ஆண்டில் முஹமட் சாலா வென்றிருந்தார். 2018 ஆம் ஆண்டில் லிவர்பூல், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறுவதற்கும் சாலாவின் சிறந்த ஆட்டமும் காரணமாகும்.

கடந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் சாடியோ மானே இரண்டாவது இடத்தைப் பெற்ற வேளையில் காபோன் நாட்டைச் சேர்ந்த அவ்பாமேயாங் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அவ்பாமேயாங், இறுதி மூன்று ஆட்டக்காரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன