வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > தாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் !
விளையாட்டு

தாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் !

அபுதாபி, ஜன.7-

2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 1 – 4  என்ற கோல்களில் இந்தியாவிடம் தோல்வி கண்டதை அடுத்து, மிலோவன் ரஜேவேச் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  தாய்லாந்தின் சிரிசாக் யோட்யார்தை தற்காலிகமாக பயிற்றுனராக செயல்படுவார் என தாய்லாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுத் தொடங்கி, கானாவைச் சேர்ந்த  மிலோவன் தாய்லாந்து கால்பந்து அணியின் பயிற்றுனராக செயல்பட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரையில் அவர் ஒப்பந்தம் கொண்டிருந்தாலும் இந்தியாவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தரும் தோல்வி அவரின் பயிற்றுனர் பொறுப்பைப் பறித்துள்ளது.

கடந்த மாதம் ஏ.எப்.எப். சுசூகி கிண்ண கால்பந்துப் போட்டியிலும் தாய்லாந்து, மலேசியாவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி, தாய்லாந்து கால்பந்து சங்கத்தை சினமடைய வைத்துள்ளது. அதன் காரணமாக மிலோவனை உடனடியாக பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ,  ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியில் மீண்டும் களம் காணும் தாய்லாந்து வரும் வியாழக்கிழமை பாஹ்ரீனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிப் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன