திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மை 100 பயண அட்டைகளுக்கு அமோக வரவேற்பு -அந்தோணி லோக்
சமூகம்முதன்மைச் செய்திகள்

மை 100 பயண அட்டைகளுக்கு அமோக வரவேற்பு -அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஜன. 8-
பிரசாரானா மலேசியா பெர்ஹாட்டின் மை 100 கணக்கற்ற சேவைக்கான பயண அட்டைகளுக்கு பயனீட்டாளர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் முதல் ஏழு நாள்களில் இந்த பயண அட்டைகள் ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டையை டிசம்பர் மாதம் முழுவதும் 34 ஆயிரத்து 472 பேர் வாங்கியுள்ளனர். இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 30ஆயிரத்து 635 பேர் இந்த அட்டைகளை வாங்கியுள்ளனர் என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டியில் எண்ணற்ற முறையில் பயணம் செய்வதன் வழி தங்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க முடியும் என்ற காரணத்திற்காகவே அதிகமானோர் இந்த மாதாந்திர மை 100 பயண அட்டையை பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தால் பயணிகளிடமிருந்து தாம் நல்ல கருத்துகளைப் பெற்றிருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வாடிக்கையாளர்களைக் கவரும் இலக்கை எட்ட முடியும் என்று பிரசாரானா நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்தோனி லோக் சொன்னார்.

பிரசாரானாவின் மை 100 மற்றும் மை 50 திட்டத்திற்காக அரசாங்கம் 24 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இதுவரை மை 100 திட்டத்திற்காக மாதம் 65 லட்சம் வெள்ளியை நாங்கள் ஒதுக்கீடு செய்துள்ளோம். 2 லட்சம் பயணிகள் இலக்கு அடையப்பட்டால் இந்த ஒதுக்கீடு 40லட்சம் வெள்ளியாகக் குறைக்கப்படும் என்று அவர் சொன்னார்..

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் மாதாந்திர பஸ் பயணத்தற்கான மை 50 பயண அட்டை குறித்து பேசிய அமைச்சர் மை 100 பயண அட்டைக்கான வரவேற்பை ஒப்பிடுகையில் இதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே உள்ளனர் என்று அவர் கூறினார்.

மை 50 அட்டைகளை 1 லட்சத்து 577 பயணிகளே பயன்படுத்துகின்றனர். ஆனால், மை 100 அட்டைகளை 65 ஆயிரத்து 125 பயணிகள் பயன்படுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன