புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறியது -டத்தோ டி.மோகன் 
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி கைமாறியது -டத்தோ டி.மோகன் 

கோலாலம்பூர், ஜன 8-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கான வாக்கெடுப்பு வெற்றி பெற்று இருப்பதாகவும் அது குறித்து மத்திய செயலவையில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா போட்டியிட வேண்டுமென தாம் வலியுறுத்திய நிலையில் வாக்கெடுப்பு தமக்கு சாதகமாக அமையவில்லை என்று அவர் கூறினார்.

தேசிய தலைவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்க சிலர் நேரடியாக விரும்பாத காரணத்தினால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாக கூறிய அவர் பின்னர் கை தூக்கி வாக்கெடுப்பு முறை நடந்ததாகவும் தெரிவித்தார். இதில் ஐவர் மட்டுமே தொகுதியின் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் எஞ்சிய அனைவரும் தொகுதியை மாற்றிக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் மோகன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சியான அம்னோவின் நடவடிக்கை மிகவும் தவறு என அவர் சுட்டிக்காட்டினார். இதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மத்திய செயலவை எடுத்த முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். தமது தனிப்பட்ட கருத்தாக இந்த நடவடிக்கை தவறு மோகன் சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு முறையும் நம்மிடம் இருக்கும் தொகுதிகளை தட்டிப்பறிப்பது அம்னோவின் குறிக்கோளாக இருக்கின்றது அப்படி தட்டிப்பறித்த எத்தனை தொகுதிகளில் அவர்கள் வெற்றியை பதிவு செய்துள்ளார்கள் என்ற கேள்வியையும் மோகன் முன்வைத்துள்ளார்.

இந்த நடைமுறை கலாச்சாரத்தை மாற்ற வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் உண்மை ஒதுக்கி விடுவார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு அம்னோதான் காரணம். மக்கள் அக்கட்சியை வெறுத்தார்கள். அது நம்மையும் பாதித்தது என்பதை இன்னமும் நாம் உணராமல் இருக்கின்றோம். தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டால் மட்டுமே நமது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கு நாம் எந்த வகையிலும் முயற்சி செய்யவில்லை என்று மோகன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன