செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > புகை பிடிக்கும் தடை: உயர்கல்வி நிலையங்களிலும் அமல் -டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா
சமூகம்முதன்மைச் செய்திகள்

புகை பிடிக்கும் தடை: உயர்கல்வி நிலையங்களிலும் அமல் -டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா

புத்ராஜெயா, ஜன.8-
புகை பிடிக்கும் தடையை உயர்கல்வி நிலையங்களிலும் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் நாடாளுமன்ற வளாகம் ஆகிய இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை உயர் கல்வி நிலையங்களிலும் அமல்படுத்தப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதனை அமல்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அது இந்த ஆண்டில் அமல்படுத்தப்படலாம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்தாண்டு அக்டோபர் 15ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலும் ஜனவரி 1ஆம் தேதி முதல் உணவகங்களிலும் புகை பிடிப்பதற்கு எதிராக தடை விதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன