செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை தற்காத்தார் முஹமட் சாலா !
விளையாட்டு

ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை தற்காத்தார் முஹமட் சாலா !

டாக்கார், ஜன.9-

2018 ஆம் ஆண்டுக்கான ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை எகிப்தின் முஹமட் சாலா தற்காத்துக் கொண்டுள்ளார். செவ்வாய்கிழமை செனகலில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில், லிவர்பூலின் சாலா, செனகலின் சாடியோ மானே, காபோனின் பியேரி எமெரிக் அவ்பாமேயாங்கைப் பின்னுக்குத் தள்ளி விருதை தட்டிச் சென்றார்.

சிறு வயது முதலே ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை வெல்ல வேண்டும் என்பது தமது கனவாகும் என சாலா கூறினார். தற்போது இரண்டு முறை தொடர்ச்சியாக அவ்விருதை வென்றிருப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அவர் மேலும் சொன்னார். 1983 ஆம் ஆண்டில் மாஹ்மோட் அல் காத்திப்பிற்குப் பிறகு, ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை வென்ற எகிப்து ஆட்டக்காரர் என்ற பெருமையை சாலா கடந்த ஆண்டில் பெற்றார்.

இதனிடையே 2019 ஆம் ஆண்டுக்கான ஆப்ரிக்க கிண்ண கால்பந்துப் போட்டி வரும் ஜூன் மாதம் எகிப்தில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டில் போட்டியை ஏற்று நடத்த வேண்டிய கெமரூன் முறையான தயார்நிலைகளை மேற்கொள்ளாததால் போட்டியை மற்றொரு நாட்டில் நடத்த ஆப்ரிக்க கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.இதில்,  தென் ஆப்ரிக்கா மற்றும் எகிப்துக்கும் இடையில் நடந்த வாக்களிப்பில் எகிப்து வெற்றி பெற்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன