திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > காராபாவோ கிண்ணம் – செல்சியை வீழ்த்தியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !
விளையாட்டு

காராபாவோ கிண்ணம் – செல்சியை வீழ்த்தியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

லண்டன், ஜன.9-

இங்கிலாந்தின் காராபோவா கிண்ண கால்பந்துப் போட்டியின் ( லீக் கிண்ணம் ) முதல் அரையிறுதி ஆட்டத்தில் , டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர்  1 – 0 என்ற கோலில் செல்சியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் ஒரே கோலை அதன் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாரி கேன் அடித்தார்.

26 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் மூலம் ஹாரி கேன் அந்த கோலைப் போட்டார். இந்த கோலானது , டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணியில் ஹாரி கேன் போட்டிருக்கும் 160 ஆவது கோலாகும்.  வீடியோ துணை நடுவர் தொழில்நுட்ப உதவியுடன், நடுவர் மைக்கல் ஒலிவர் வழங்கிய பினால்டியை ஹாரி கேன் கோலாக்கினார்.

முன்னதாக செல்சி கோல் காவலர் கெப்பா அரிஸ்பலாகா,   ஹாரி கேன்  மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தும்போது அவரை பினால்டி பகுதியில் கீழே தள்ளினார்.எனினும் ஹாரி கேன், ஒப்சைட் நிலையில் இருந்ததாக கருதியதால், நடுவர் பினால்டி வழங்குவது குறித்து தயங்கினார். பின்னர், வீடியோ துணை நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் மைக்கல் ஒலிவர் பினால்டியை வழங்கினார்.

முதல் ஆட்டம் வெம்பிளி அரங்கில் நடைபெற்றிருக்கும் வேளையில் இரண்டாவது ஆட்டம் செல்சியின் சொந்த அரங்கில் நடைபெற விருக்கிறது. எனவே இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டோட்டேன்ஹம்மை தடுத்து நிறுத்த செல்சி கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன