வியாழக்கிழமை, ஜூன் 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிவராஜ் தொடுத்த வழக்கு தள்ளுபடி! தேர்தலில் போட்டியிட முடியாது! நீதிமன்றம் உத்தரவு
அரசியல்குற்றவியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

சிவராஜ் தொடுத்த வழக்கு தள்ளுபடி! தேர்தலில் போட்டியிட முடியாது! நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் ஜனவரி 10-

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மலேசிய தேர்தல் ஆணையம் தமக்கு அனுமதி வழங்க மறுத்தது குறித்து உயர் நீதிமன்றத்தில் டத்தோ சிவராஜ் சந்திரன் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஉறுதி செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தேர்தல் குற்றச்செயல் செக்ஷன் 37 பிரிவின் கீழ் சிவராஜ் சந்திரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் எந்த தவறும் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் நடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு டத்தோ சிவராஜ் சந்திரன் வெற்றி பெற்றார். இருப்பினும் அந்த தொகுதியில் பணபட்டுவாடா நடந்தது குறித்து ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும் அதனால் தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தேர்தலில் குற்றச் செயல் புரிந்த காரணத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிவராஜ் சந்திரன் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதோடு ஐந்து ஆண்டுகளுக்கு அவர் வாக்களிக்கும் தகுதியையும் இழந்து உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன