புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்; நான்கு முனைப் போட்டி
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்; நான்கு முனைப் போட்டி

கேமரன் மலை, ஜன 12-
இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

சுல்தான் அகமட் ஷா இடைநிலைப் பள்ளியில் இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரனின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் கடந்த நவம்பரில் அறிவித்தை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கேமரன் மலையில் மொத்தம் 32,009 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலின் போது சுமார் 70 விழுக்காட்டு மக்கள் தங்களின் கடமையை நிறைவேற்றுவது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பகாங் மாநில ஐசெக கட்சித் தலைவர் எம். மனோகரன், தேசிய முன்னணி வேட்பாளர் ரம்லி முகமட் நூர், மற்றும் சுயேட்சையாக போட்டியிட இருக்கும் சலேஹுடின் அப்துல் தாலிப் மற்றும் வோங் செங் யீ ஆகியோர் தங்களது வேட்பு மனுத் தாக்கலை ஒப்படைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன