வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை இடைத்தேர்தல்; டான்ஸ்ரீ கேவியஸ் போட்டியிடவில்லை
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை இடைத்தேர்தல்; டான்ஸ்ரீ கேவியஸ் போட்டியிடவில்லை

கேமரன் மலை, ஜன. 12 –
கேமரன் மலை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மைபிபிபியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரம் வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவில்லை.

இறுதியில் அவர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார் என இணையத்தள பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்கு டான்ஸ்ரீ கேவியஸ் வந்தார். கேமரன் மலையில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்ததுபோல வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் தாம் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாககவும் நம்பிக்கை கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையில் நியாயமான போட்டி நிலவ வழிவிடும் வகையில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன