வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஜன.22 தொடங்கி இரவு 10 வரை யுடிசி மையங்கள்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜன.22 தொடங்கி இரவு 10 வரை யுடிசி மையங்கள்

கோலாலம்பூர், ஜன. 12
யுடிசி எனப்படும் நகர்ப்புற உருமாற்று மையங்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் இரவு 10 மணி வரை சேவை செயல்படும்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்காகவும் அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஷா ஆலம், சிரம்பான், அலோர் ஸ்டார், ஜோகூர் பாரு, கோத்தா பாரு, கோலத்திரங்கானு, கெராமாட், ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாள்களில் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இவற்றை தவிர்த்து இதர யுடிசி மையங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன