செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜோ லோவை தேடும் பணி தொடர்கிறது-டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜோ லோவை தேடும் பணி தொடர்கிறது-டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண்

கேமரன் மலை, ஜன. 13-
1எம்டிபி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஜோ லோவை தேடுவதில் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீசுடன் அரச மலேசிய போலீஸ் தீவிரமான தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண் தெரிவித்துள்ளார்.

அதோடு ஜோ லோவை கண்டுபிடிக்க சீன நாட்டு அதிகாரிகளுடன் மலேசிய போலீஸ் சில சந்திப்புகளை நடத்தியிருக்கின்றது.

கேமரன் மலையில் உள்ள தங்கும் விடுதியில் அரச மலேசிய போலீஸ் படை, அரச மலேசிய சுங்கத் துறையின் உயர்நிலை கூட்டத்தை நிறைவு செய்த பின் அவர் நிருபர்களிடம் இதனை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன