செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > லா லீகாவில் 400 ஆவது கோலை அடித்தார் மெஸ்சி !
விளையாட்டு

லா லீகாவில் 400 ஆவது கோலை அடித்தார் மெஸ்சி !

மாட்ரிட், ஜன.14-

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவின் லியோனெல் மெஸ்சி தனது 400 ஆவது கோலைப் போட்டு அதிரடி படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 3 – 0 என்ற கோல்களில் எய்பார் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா, ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஐரோப்பா அளவில் 400 ஆவது லீக் கோலைப் போட்டிருக்கும் இரண்டாவது ஆட்டக்காரராக மெஸ்சி விளங்குகிறார். இதற்கு முன்னர் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்று வெவ்வேறு கிளப்புகளுடன் 509 ஆட்டங்களில் 400 கோல்களை அடித்திருக்கிறார்.எனினும் ரொனால்டோவைக் காட்டிலும் 63 ஆட்டங்கள் குறைவான எண்ணிக்கையில் மெஸ்சி அந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.

அதேவேளையில் ஸ்பெயின் லா லீகா போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஆட்டக்காரர் என்ற பெருமையையும் மெஸ்சி பெற்றிருக்கிறார். இத்தாலியின் யுவன்டசில் தற்போது விளையாடி வரும் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப்புடனான 292 ஆட்டங்களில் 311 கோல்களைப் போட்டிருக்கிறார். அதேவேளையில் தெல்மோ சாரா என்ற ஆட்டக்காரர் 251 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன