செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > உலகின் சிறந்த கோல் காவலர் டாவிட் டே ஹே !
விளையாட்டு

உலகின் சிறந்த கோல் காவலர் டாவிட் டே ஹே !

லண்டன், ஜன்.14-

மென்செஸ்டர் யுனைடெட் கோல் காவலர் டாவிட் டே ஹே, உலகின் மிகச் சிறந்த கோல் காவலர் என அந்த கிளப்பின் இடைக்கால நிர்வாகி ஓலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட்டின் வரலாற்றிலும் மிக சிறந்த கோல் காவலர் என்ற அந்தஸ்தை அவர் பெறுவார் என சோல்ஜ்ஸ்கர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வெம்பிளி அரங்கில் நடந்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1 – 0 என்ற கோலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் ஒரே வெற்றி கோலை மார்கோஸ் ராஷ்போர்ட் முதல் பாதி ஆட்டத்தில் அடித்தார்.

எனினும் ஹாரி கேன் தலைமையில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மேற்கொண்ட பல தாக்குதல்களை கோல் காவலர் டாவிட் டே ஹே லாவகமாக முறியடித்தார். டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மேற்கொண்ட 11 தாக்குதல் முயற்சிகளை டே ஹே தடுத்து நிறுத்தினார்.

மென்செஸ்டர் யுனைடெட்டின் தற்காப்பு அரணில் இரும்புத்துணைப் போல் நின்றிருந்த டேவிட் டே ஹேவின் அற்புத ஆட்டம் டோட்டேன்ஹம் தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த வெற்றியின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அர்செனலுக்கு ஈடான புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.எனினும் கோல் வேறுபாட்டில் மென்செஸ்டர் யுனைடெட் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன