செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மைபிபிபி கட்சியின் பதிவு ரத்து !
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்

மைபிபிபி கட்சியின் பதிவு ரத்து !

கோலாலம்பூர், ஜன.14-

மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை  சங்கங்களின் பதிவகதிகாரி மஷாயாத்தி அபாங் இப்ராஹிம் அக்கட்சியின் தலைவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்.

கடந்த ஆண்டில் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மைபிபிபி கட்சியின் தலைமைத்துவ போரட்டம் வெடித்தது. இதில் கட்சியின் அப்போதைய தலைவர் டான் ஶ்ரீ கேவியஸ் பதவி விலகுவதாக கடிதம் ஒன்றை வழங்கியப் பின்னர் அதனை மீட்டுக் கொண்டார். அதேவேளையில் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து கேவியசை நீக்க உச்சமன்றம் முடிவு செய்ததாக மூத்த உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ மெக்லின் டி குருஸ் தலைமையில் கூட்டம் அறிவித்தது.

இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையிலான பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு சங்கங்களின் பதிவகம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இரண்டு தரப்புகளும் தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண தவறியதை அடுத்து மைபிபிபி கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுவதாக சங்கங்களின் பதிவகம் அறிவித்துள்ளது. ஆர்.ஓ.எஸ்-சின் முடிவு தொடர்பில் மேல் முறையீடு செய்ய மைபிபிபி கட்சிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

டான் ஶ்ரீ கேவியஸ் தமது தலைமையிலான மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி விட்டதாக கடந்த ஆண்டில், மே மாதம் அறிவித்தார்.  அதேவேளையில் அக்கட்சி தேசிய முன்னணியில் நீடிப்பதாக, மெக்லின் தலைமையிலான அணி அறிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன