திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > மகேஸ்வரன் சுட்டுக் கொலை!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மகேஸ்வரன் சுட்டுக் கொலை!

சுங்கைப்பட்டாணி, ஜன. 14- 

குண்டர் கும்பல் ஒன்றில் இருப்பதாக நம்பப்படும் மகேஸ்வரன், (வயது 28) கம்போங் ஜெரோங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் கோலா கெட்டிலில் திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு நிகழ்ந்த போலீசுடனான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.

இதில் மகேஸ்வரனை இங்குள்ள பாயா நாஹு அடுக்ககத்தில் ஒர் ஆடவனுடன் காரில் ஏறிச் சென்ற போது போலீஸ் கண்டுபிடித்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், எஸ்ஏசி மியோர் பாரிடா லாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது மகேஸ்வரனை கோலா மூடாவிலிருந்து கோலா கெட்டில் வரை 20 கி.மீட்டர் தூரத்திற்கு கோலா மூடா மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறை, கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசார் துரத்திச் சென்றனர்.

அவர்கள் பயணித்த தோயோத்தா வியோஸ் ரக கார் போலீஸ் காரை மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் தடம் புரண்டது. இதில் அவர்கள் இருவரும் காரிலிருந்து வெளியேறி போலீசை நோக்கிச் சுட்ட போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் மகேஸ்வரன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைப்படி பாயா நாஹுவில் கடந்தாண்டில் ஓர் இந்தியப் பெண்ணைக் கொலை செய்தது, கொள்ளைச் சம்பவம், அபாயகரமான ஆயுதத்தை வைத்திருத்தல் உட்பட 11 குற்றப் பதிவுகள் தொடர்பில் மகேஸ்வரனை போலீஸ் நீண்ட காலமாகத் தேடி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் 307ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மியோர் குறிப்பிட்டார்.

படம் உண்டு
Polis-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன