அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > விஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அளித்த பரிசு!

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் விஜய் சேதுபதிக்கு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படக்குழுவினர் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்த தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன