அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார் – அப்துல் அசிஸ்

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹும் தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து  விராசணைக் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் மற்றும் 14 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட லஞ்சம் பெற்றதன் தொடர்பிலான இந்த ஊழல் குற்றச்சாட்டுகளையே அவர் மறுத்துள்ளார்.

அவரின் சகோதரரும், தம்மீது சுமத்தப்பட்ட 40 லட்சம் ரிங்கிட் லஞ்சம் தொடர்பிலான 2  குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார். கோலாலம்பூர் செஷசன்ஸ் நீதிமன்றத்தில், புதன்கிழமை அவர்கள் இருவர் மீது அந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

52 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கையூட்டு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கையின் மூலம் 14 கோடி ரிங்கிட் மதிப்பின் தொடர்பில், 12 குற்றச்சாட்டுகளை, அப்துல் அசிஸ் எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டு சிறை மற்றும், கையூட்டுத் தொகையில் இருந்து ஐந்து மடங்கு வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன