முகப்பு > கலை உலகம் > அனைத்துமே கடவுள் கையில் – அஜித்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

அனைத்துமே கடவுள் கையில் – அஜித்!

பொங்கல் வெளியீடான, ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூலில் கல்லாவை நிறைத்து வருகின்றன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்து வருவது, 2019-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது.

இதில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி முதலிடத்தில் உள்ளது. அதுபோல, பேட்ட படம் உலக தரத்தின் வசூலில்  முதன்மையாக  முதன்மையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது, என்று ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

படத்தில் நல்ல விமர்சனம் குறித்த தகவலை நடிகர் அஜித்திடம் கூறிய போது,
‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்று தன்னடத்தோடு கூறியதாக தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன