அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ரொனால்டோவின் ஒரே கோலில் வெற்றி பெற்ற யுவன்டஸ் !
விளையாட்டு

ரொனால்டோவின் ஒரே கோலில் வெற்றி பெற்ற யுவன்டஸ் !

ஜெட்டா, ஜன.17-

இத்தாலி சூப்பர் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யுவன்டஸ் 1 – 0 என்ற கோலில் ஏ.சி. மிலான் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில்  கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்ட ஒரே கோல், யுவன்டசின் வெற்றியை உறுதிச் செய்தது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்,  யுவன்டஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோவை விலைக்கு வாங்கியது. இந்நிலையில் ரொனால்டோவின் வருகை, யுவன்டசுக்கு இத்தாலி சூப்பர்  கிண்ணத்தைப் பெற்று தந்துள்ளது.

இந்த ஆட்டத்தில் 71 ஆவது நிமிடத்தில், ஏ.சி மிலான் ஆட்டக்காரர் பிரான்க் கெசிக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் கடைசி 17 நிமிடங்கள், அந்த அணி 10 ஆட்டக்காரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ரொனால்டோ இதுவரை , இங்கிலாந்து, ஸ்பெயின் கிளப்புகளில் விளையாடியதன் வழி 28 கிண்ணங்களை வென்றிருக்கிறார். இதில் ஐந்து சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களும் அடங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன