நாட்டின் முதன்மை இடத்தில் இருக்கும் மாட்சிமைத் தங்கிய பேரரசருக்கு எதிராக நிந்தனை அடிப்படையிலான அறிக்கைகளை சமூக வலைத் தளங்களில் வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும், தகவல், செய்திகள் மற்றும் அறிக்கைளில் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டும் கொண்டுள்ளார்.

புத்ராஜெயாவில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது கோபிந்த் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், மலேசிய தொடர்பு மற்றும் பல்முனைத் தகவல் ஆணைக் குழு இது குறித்து விசாரணை செய்யும் என்றும், கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிரானவர்கள் மீது தேசிய சட்டத்துறைத் இலாகா, இது குறுத்த இறுதி முடிவை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் பேரரசர் தொடர்பான செய்திகளில், அனைவரும் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.