வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சர்வதேச அங்கீகாரம் பெற்றது ‘ரவுடி பேபி’!
கலை உலகம்

சர்வதேச அங்கீகாரம் பெற்றது ‘ரவுடி பேபி’!

அமெரிக்காவின் பிரபல ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் (THE HOLLYWOOD REPORTER) குழுமத்தின் உலக அளவில் இசை தொடர்பான செய்திகளுக்கு புகழ்பெற்ற ‘பில்போர்ட்’ சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் யூடியூப்பில் வெளிவந்த வீடியோ பாடல்கள் தரவரிசையில் யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 21ந் தேதி வெளியான `மாரி 2’ படத்தில் இடம்பெற்ற `ரவுடிபேபி’ பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி தீ உடன் தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

இந்த பாடலின் வீடியோ சென்ற வாரம் யூடியூபில் வெளியானது. வெளியான ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இப்பாடல் 8 கோடி வியூவ்ஸ் தாண்டி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன