திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோலகுபுபாருவில் ஒற்ற்றுமைப் பொங்கல்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலகுபுபாருவில் ஒற்ற்றுமைப் பொங்கல்

கோலகுபுபாரு, ஜன. 18-
கோலகுபுபாரு கம்போங்பாரு குடியிருப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் அவ்வட்டார இளைஞர்களின் முயற்சியில் ஒற்றுமைப் பொங்கல் விழா மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

டாக்டர் ஹரி முருகையா, பிரகாஷ் வேலு, பிரகாஷ், பவளச்செல்வன் மாரிமுத்து ஆகிய 4 இளைஞர்களின் முயற்சியில் பலவருடங்களுக்குப் பிறகு அந்தக் குடியிருப்புப் பகுதியில் அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய குடும்ப விழாவாக இது அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து நீண்ட நாட்களுக்கு முன்னரே வெளியேறிய பலரும் ஒரே குடும்பமாக ஒன்றுகூடி மகிழ்ந்தனர். கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் 20க்கும் மேற்பட்ட குருகுல ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் பொங்கல் விழாவுக்கு பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டனர்.

இந்த மாணவர்கள், இங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களோடு இணைந்து சட்டி உடைக்கும் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிக உற்சாகமாக விளையாடினர்.

உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற கவுன்சிலர் கனகராஜா, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன