அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்

கோலாலம்பூர், ஜன. 19-
மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான லியூ டேரன் சீனாவின் சீ யூ கியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

ஆனால், காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். அவருடன் அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருந்த தென்கொரியாவின் ஆட்டக்காரர் சூ வென் ஹோ இறுதியாட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றார்.

புக்கிட் ஜாலில் அக்சியாத்தா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் டேரன் 21-12, 16-21, 21-11 என்ற புள்ளி கணக்கில் சீ யூ கியை வீழ்த்தியிருந்தார்.

அரையிறுதி ஆட்டத்திலும் டேரன் இதே வேகத்துடன் விளையாடி இறுதியாட்டத்திற்கு நுழைவார் என்று மலேசிய பேட்மிண்டன் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அவர் விலகி கொண்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன