கோலாலம்பூர், ஜன 20-
ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, செயலி, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் போன்ற தளங்களில் மக்களுக்குக் கொண்டு செல்லும் மாபெரும் பணியை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

இன்று ஜனவரி 20-ஆம் தேதி தொடக்கம் ஜனவரி 21-ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231, அஸ்ட்ரோ கோ செயலி மற்றும் www.astroulagam.com.my/thaipusam2019 வாயிலாக குறிப்பிட்ட நேரங்களில் இந்தச் சிறப்பு நேரலையை வாயிலாக கண்டு களிக்கலாம்.

இவ்வாண்டு திரு அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் கருப்பொருளை மையமாகக் கொண்டு கோலாலம்பூர் பத்துமலை, ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர் மலை மற்றும் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரணிய சுவாமி ஆலயத் திருத்தலங்களிலிருந்து அண்மைய நிலவரங்களை அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்குவார்கள்.

இந்தச் சிறப்பு நேரடி ஒளிப்பரப்பில் பாடகர் டி.எல் மகாராஜனின் சிறப்பு நேர்காணலும், முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் அறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலையில் நடைபெறும் தைப்பூசக் கொண்டாடத்தின் நிலவரங்கள் ஆஸ்ட்ரோ உலகத்தின் சிறப்பு நேரலையில் இடம்பெறும்.

சமூக வளத்தளங்களில் இவ்வாண்டு தைப்பூச கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் காண்பதற்கு ஹேஷ்டேக் #VelVelMuruga பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, ரசிகர்கள் தங்களுடைய தைப்பூச கொண்ட்டாடத்தின் புகைப்படங்களை #VelVelMuruga பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் (Facebook, Instagram, Twitter) பதிவேற்றம் செய்யலாம்.
தைப்பூச கொண்டாட்டத்தைக் குறித்த தகவல்கள் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசைட் (microsite) வாயிலாக அவ்வப்போது பெற்று கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/ அகப்பக்கத்தை வலம் வருங்கள்.