அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > பத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது; 34 பேர் காயம்

கோம்பாக், ஜன.22
பத்துமலை தைப்பூசத்தில் பட்டாசு வெடித்ததில் 34 பேர் காயமுற்றதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சோர் மாரொப் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆலயம் அருகே வானில் வெடிக்க வேண்டிய பட்டாசு திடீரென சாலையில் வெடித்ததில் அருகிலிருந்து 34 பேர் காயமடைந்ததாக அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் 3 பேர் செலாயாங் பெரிய மருத்துவமனைக்கும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு 2 பேரும், ஒருவர் சுங்கை பூலோ பெரிய மருத்துவமனைக்கும் 28 பேர் அருகிலுள்ள சுகாதார கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டனர்.

இதில் நிஸ்ஸான் செரெனா, புரோட்டோன் எக்சோரா, பெரோடூவா மைவி கார்களும் சேதமடைந்தன.

இதில் சம்பந்தப்பட்ட 23 மற்றும் 28 வயது கொண்ட 2 ஆடவர்கள் குற்றவியல் சட்டம் 286ஆவது பிரிவின் கீழ் விசாரணைகாக கைது செய்யப்பட்டுள்ளதாக சம்சோர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன