கோலாலம்பூர், ஜன 24
நாட்டின் 16ஆவது மாட்சிமை தங்கிய பேரரசராக பகாங் சுல்தான், அல் அப்துல்லா ரி அயார்துடின் அல் முஸ்தாபா பில்லா ஷா இப்னி சுல்தான் ஹஜி அகமது ஷா அல்முஸ்தாஇன் பில்லா ஷா இன்று தேர்வு செய்யப்பட்டார்.
இவ்வாண்டு ஜனவரி 31 தொடங்கி 5 ஆண்டு கால தவணைக்கு இவர் மாமன்னராக தேர்வு பெற்றுள்ளார். இஸ்தானா நெகாராவில் இன்று கூடிய 251ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் இந்த மாமன்னர் தேர்வு நடைபெற்றது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாட்சிமை தங்கிய மாமன்னராக அரியணை அமர்ந்த சுல்தான் முகமட் V கடந்த ஜனவரி 6ஆம் தேதி 15ஆவது மாமன்னர் பதவியை துறந்ததை தொடர்ந்து பகாங் சுல்தான் அவருக்கு பதிலாக தேர்வு பெற்றார்.
ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தின் மேன்மை தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா இதே தவணை காலத்திற்கு துணை மாமன்னராக தேர்வு பெற்றார்