இந்தியாவின் 70-வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் தலைநகர் புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், 21 குண்டுகள் முழங்க, ராஜ்பாத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்க, முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில், அணிவகுப்பும் நடபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதுடன், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்ற இந்நாள் குறித்த 15 முக்கியத் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
1. 1947-ல் சுதந்திரம் பெற்ற ஆண்டுகளுக்குப் பின்பு, முதல் குடியரசு தினம் ஜனவரி 26-ம் நாள் 1950ல் கொண்டாடப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26, காலை 10.18 மணியளவில் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
3. இந்திய அரசியலைமைப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. இதில் 444 கட்டுரைகள் உள்ளன.
4. இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் இந்திய அரசியலைமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
5. முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேசிய அதிபர் சுக்கர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
6. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசின், இந்திய அரசாங்கச் சட்டம் 1935 என்றே செயல்பட்டுக் கொண்டிருந்தது.
7.இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கைப்பட எழுதப்பட்டது.
8. முதல் இந்திய ராணுவ அணிவகுப்பு 1955 ராஜ்பாத்தில் நடைபெற்றது.
9. குடியரசு தின அணிவகுப்பில் Abide With Me என்ற ஒரு கிறிஸ்த்துவப் பாடல் ஒன்று இடம் பெறும். இந்தப் பாடல் மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் என்று நம்பப்படுகிறது.
10. குடியரசுத் தினக் கொண்டாட்டம் மூன்று நாள் அதாவது ஜனவரி 29 வரைக் கொண்டாடப்படும்.
11. ஜனவரி 26, 1965-ல் இந்தியை தேசிய மொழியாக அறிவித்தனர்.
12. இந்தியாவின் அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து மிகவும் மேம்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,ஆகியவை பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
13. குடியரசுத் தினத்தில் தேசிய விருதுகளான பாரத் ரத்னா, கீர்த்தி சக்ரா, பத்மா விருதுகள் அறிவிக்கப்படும்.
14. குடியரசு தினத்தில் இந்திய விமானப் படை உருவானது.
15. ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.