அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியின் `அசுரன்’!!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியின் `அசுரன்’!!

`வடசென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் இணையும் `அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

படத்தின் பெர்ஸ்ட் லுக் (FIRST LOOK) போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் – மஞ்ச வாரியர் இருவரும் 1980-களில் இருப்பது போன்ற தோற்றம் வெளியாகி உள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார்.

வடசென்னையின் வெற்றிக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் மேலும் ஒரு வெற்றிப்படமாக இது அமையும் என்று கணிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன