கோலாலம்பூர், ஜன 28
தென்னாசியாவில் பழமை வாய்ந்த நாளிதழ்களில் ஒன்றாக விளங்கும் தமிழ்நேசன் இந்த மாதத்தோடு நிறுத்தப்படுகின்றது. பிப்ரவரி 1ஆம் தேதி தொடக்கம் தமிழ்நேசன் நாளிதழ் வெளி வராது என்ற செய்தி கசிந்துள்ளது.

குறிப்பாக அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தத்திற்கான உறுதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில் தமிழ்நேசன் நாளிதழ் நிறுத்தப்படும் என கருதப்படுவதோடு அவர்களுக்கான ஊதியம் மூன்றாம் மாதம் வரை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நேசன் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதால் பொருளாதார பாதிப்பை அந்நிறுவனம் எதிர்நோக்கியுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன் காரணமாக தமிழ் நேசனின் நிர்வாகம் ஊடகத் துறையில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளது.

1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் நியூஸ் தந்தி நாளிதழ் தென்னாசியாவிலேயே பழமை வாய்ந்த நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது 2024 நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் அந்நாளிதழ் 96ம் ஆண்டு தனது பணியை நிறுத்திக் கொண்டிருப்பது தமிழ் வாசகர்களிடையே மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மலேசியாவின் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை பதிவு செய்த ஒரே நாளிதழ் என்ற பெருமையை கொண்டிருந்த தமிழ்நேசன் இனி வெளிவராது என்ற செய்தி வாசகர்களுக்கு வருத்தம் தான்.

1 COMMENT

  1. 96 வருட சரித்திரம் படைத்த நாளிதழ். மூடு விழா காண்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. அதுவும் நம் டத்தின்ஸ்ரீ தலைமையில் நடத்தப்படும் நாளிதழ். தயவு செய்து இதற்கு மாற்று வழி காணவும். கூடுதல் பங்கங்கள், போட்டிகள், அதிக உலக செய்திகள் என
    சில மாற்றங்களை செய்யவும். நன்றி.

Comments are closed.