இ.சி.ஆர்.எல் திட்டம் தொடர்வதைவிட ரத்து செய்வதே மேல் – டாக்டர் மகாதீர்

0
13

இ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக்கரை ரயில் திட்டம் தொடர்வதைக் காட்டிலும், அதனை ரத்து செய்வதன் மூலம் செலுத்தப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை  அரசாங்கத்திற்கு அத்தனை சுமையாக இருக்காது.

ஒருவேளை, இந்த இ.சி.ஆர்.எல் திட்டம் தொடரப்படுமானால், அரசாங்கம் 30 ஆண்டுகளுக்கும் மேலான, பெரும் கடன் சுமையை எதிர்நோக்கும் சூழ்நிலை ஏற்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

இனியும் நாடு மிகப் பெரிய கடன் சுமையை சுமக்கக் கூடாது என்ற நோக்கமே அரசாங்கத்திற்கு தற்போது முக்கியமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் தொடர்புடையவர்களின் நிலமையையும் வருத்தத்தையும்  அரசாங்கத்தால்  உணர முடிந்தாலும், நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.

தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட சில செலவுகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே இந்த முடிவு எடுக்கப்படவில்லை மாறாக, இந்த குத்தகை 10 ஆயிரம் கோடி ரிங்கிட் செலவை உட்படுத்துவதால், அரசாங்கம் இதில் கவனமாக செயல்படுவதாக கூறினார்.

800 கோடி மதிப்பிலான இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கம் மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும் என்றாலும் அது தொடர்வதைக் காட்டிலும் அதிகமல்ல என்று டாக்டர் மகாதீர் உறுதியாக கூறினார்

புத்ராஜெயாவில் நடைபெற்ற 2019 முதல் 2023 வரையிலான தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை தொடக்கி வைத்த உரையாற்றியபோது,  டாக்டர் மகாதீர் இதனை கூறினார்.