ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் > பெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?

சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் கைத்தொலைப்பேசி எண்கள் கிடைத்தால் போதும். அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும்.

உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கைத்தொலைப்பேசி எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிப்படுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது.

‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

 

இந்த நிலமையை எப்படித் தவிர்க்கலாம்?

பிரச்சனைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது, ‘பிரைவஸி செட்டிங்’ பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ‘ஸ்டேட்டஸ்’, ‘லாஸ்ட் சீன்’ ஆகியவற்றை, ‘மைகான்டேக்ஸ்’ அல்லது ‘ஒன்லி மீ’ பகுதியை பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பதை காட்டும் ‘ஸ்டேடஸ்’களை பதிவு செய்யாதீர்கள். ‘குரூப்’களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளோக்’ (Block) பகுதியை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

 

ஆபத்துதவி ஆப்ஸ்! (APPS)

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ்கள், ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது.  அதன் மூலம் பெண்கள் தங்களின் பாதுகாப்பை இன்னும் பல மடங்காக அதிகரித்து கொள்ளலாம்.

நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய கைத்தொலைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும்.

ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, அதில் உள்ள குரல் பதிவு ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடுகிறதாம்.

45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இணைய வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

எனவே, பெண்கள் எல்லா நேரத்திலும் விழிப்புணர்வோடு இருப்பது நலம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன