வெள்ளைக் கொடி ஏந்த தயாராக இல்லை – குவார்டியோலா !

0
14

லண்டன், ஜன.30-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் வெள்ளைக் கொடியை ஏந்தி தோல்வியை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை என மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 -2 என்ற கோல்களில் நியூகாசல் யுனைடெட்டிடம் தோல்வி கண்டது.

இந்த தோல்வியால், மென்செஸ்டர் சிட்டி தற்போது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலைக் காட்டிலும் நான்கு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. இன்று பின்னிரவு நடைபெறவிருக்கும் லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிரானா ஆட்டத்தில் லிவர்பூல் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி வேறுபாடு ஏழாக அதிகரிக்கும்.

மென்செஸ்டர் சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான புள்ளி வேறுபாடு ஏழாக அதிகரிக்ககூடிய சாத்தியம் இருந்தாலும், லீக் கிண்ணத்தை இன்னமும் வாய்ப்புள்ளதாக பெப் குவார்டியோலா தெரிவித்தார். இன்னும் அதிகமான ஆட்டங்கள் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிராக முதல் நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோ மூலம் மென்செஸ்டர் சிட்டி முதல் கோலைப் போட்டது. எனினும் இரண்டு கோல்களைப் போட்டு நியூகாசல் யுனைடெட், நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.