புகைப் பிடிப்போருக்கான சிறப்பு பகுதிகள் ஆலோசிக்கப்படவில்லை !

0
12

தைப்பிங், ஜன.30- 

புகைப் பிடிப்போருக்காக சிறப்பு பகுதிகளை உருவாக்க அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்துள்ளார். அத்தகைய சிறப்பு இடங்கள் உருவாக்கப்படும் பட்சத்தில் அது புகைப் பிடிப்போரின் உரிமையை தடுப்பதற்கு சமமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

உணவகங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து புகைப் பிடிப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் அறிந்திருப்பதாக டாக்டர் லீ தெரிவித்தார். எனினும் இந்த நாட்டில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் இடங்கள், ஒரு விழுக்காடு கூட எட்டவில்லை என அவர் கூறினார்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் புகைப் பிடிப்பதற்காக தனியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று மலேசியாவிலும் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அது குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.