1 எம்.டி.பி முறைக்கேடுகளை மறைக்க ஈ.சி.ஆர். எல் ரயில் திட்டம் – ஜோமோ !

0
16

கோலாலம்பூர், ஜன.30-

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் ( 1 எம்.டி.பி) நடந்த முறைக்கேடுகளை மறைப்பதற்காகவே,  ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குக்கரை இரயில் திட்டம் கொண்டு வரப்பட்டதாக பொருளாதார நிபுணர் ஜோமோ குவாமே சுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் ஆதரவில் மேற்கொள்ளப்படும் அந்த திட்டம் பொருளாதார ரீதியாக மலேசியாவுக்கு மிகப் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதை தாம் அறிந்திருப்பதாக கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோமோ கூறினார்.

எனினும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்து அவர் தகவல்களை வழங்கவில்லை.  இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டால், கிழக்குக்கரை மாநிலங்களில் மேம்பாட்டு பணிகள் பாதிக்கப்படும் என கூறப்படும் கூற்றிலும் உண்மையில்லை என ஜோமோ கூறினார்.

கிழக்குக்கரை மாநிலங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆனால் கிழக்குக்கரை ரயில் திட்டத்திற்கும் அதற்கும் துளியளவு சம்பந்தமில்லை என ஜோமோ தெரிவித்தார்.