வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மகாதீர் இருக்கும்வரைதான் நம்பிக்கை கூட்டணி -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மகாதீர் இருக்கும்வரைதான் நம்பிக்கை கூட்டணி -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலும்பூர் பிப் 2-
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் நீடிக்கும்வரைதான் கட்சி செயல்படும் என மஇகா கட்சியின்  தேசிய தலைவர் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக மலேசியாவின் பிரதமராக அவர் இருந்ததால் இன்றுவரை நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை செயல்படுத்தி வருகின்றார். அவர் பதவியிலிருந்து விலகும் தருணத்தில் அக்கட்சி செயல்படாமல் போகும் என மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்தது அதற்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததுதான் முதன்மை காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் சமயத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் மறந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் இளைஞர்கள் எப்பொழுதுமே தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மனதில்தான் வைத்திருப்பார்கள் என்றார் அவர்.

மாத வருமானம் 4,000 வெள்ளி எட்டும் வரை பிடிபிடிஎன் கடனுதவியை மாணவர்கள் செலுத்த வேண்டாம் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் நம்பிக்கை கூட்டணி வழங்கியது. அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. அதேபோல் வீட்டில் இருக்கும் பாதுகாப்பிற்காக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் காற்றில் பறந்தது.

இவை அனைத்தும்தான் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு காரணமாக அமைந்தது என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை இடை காலத்திற்கு மட்டுமே நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். 15ஆவது பொதுத்தேர்தலில் அத்தொகுதியில் நாம்தான் போட்டியிடுவோம் என்னும் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட முடியாது என சிலர் கூறிவரும் நிலையில் அத்தொகுதி எங்களுடையதுதான் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையே கேமரன் மலை   வெற்றியானது தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. இதனால் செமினி சட்டமன்றத் தொகுதியிலும்  தேசிய முன்னணி கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

செமினி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய யுக்தியை பயன்படுத்தப் போவதில்லை. 15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் எவ்வாறான வெற்று வாக்குறுதிகளை வழங்கியது என்பதை மட்டும் மக்களிடம் விளக்கி கூற போகிறோம்.

மக்களுக்கு உண்மை விளங்க தொடங்கிவிட்டது அதை மேலும் விளக்கிக்கூறினார் செமினி சட்டமன்ற தொகுதியை நிச்சயமாக தேசிய முன்னணி கைப்பற்றும் என  விக்னேஸ்வரன் திட்டவட்டமாக தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன