அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் !
இந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் !

சென்னை, பிப்.3- 

சென்னையில் நடைபெற்றுவரும் இளையராஜா 75 நிகழ்ச்சியின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழவைத்தது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, சனிக்கிழமை  மாலை தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளில், பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

முதல்நாள் நிகழ்ச்சியின் உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். அப்போது பேசிய இளையராஜா, ”ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என்று நெகிழ்ந்தார்.

“ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்’’ என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கஸ்தூரி கோரிக்கை வைக்க, சிரித்துக்கொண்டே அதை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. `மன்றம்வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா தனது வசீகரக் குரலில் பாட, அரங்கமே அதிர்ந்தது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டை வாசிக்கத் தொடங்க, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

One thought on “ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் !

  1. நாராயண் கோ

    Keyboard- இசை விசைப்பலகை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன