அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் !
விளையாட்டு

ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் !

ஜோகூர் பாரு, பிப்.3 –

2019 ஆம் ஆண்டுக்கான ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை ஜோகூர் டாரூல் தாசிம் அணி வென்றுள்ளது. லார்கின் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை வென்ற ஜோகூர் டாரூல் தாசிம் 1 – 0 என்ற கோலில் மலேசிய கிண்ண வெற்றியாளரான பேராக்கை வீழ்த்தியது.

மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டமான இந்த ஆட்டத்தில், ஜோகூரின் ஒரே வெற்றி கோலை கன்சாலோ கப்ரேரா அடித்தார். ஆட்டம் தொடங்கியது முதலே தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட ஜோகூர் டாரூல் தாசிம் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏழாவது நிமிடத்தில் சஃபாவி ரஷிட் மேற்கொண்ட தாக்குதலை பேரா கோல் காவலர் ஹபிரூல் ஹக்கிம் கைரூல் முறியடித்தார். எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மத்திய திடல் ஆட்டக்காரர் ஏரோன் ஃங்குவேஸ் அனுப்பிய பந்தை கன்சாலோ கப்ரேரா கோலாக்கினார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் சமநிலைக் கோலைத் தேடும் முயற்சியில் பேரா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. எனினும் தாக்குதல் பகுதியில் கில்மார் டா சில்வா இல்லாதது, பேராவுக்கு மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இறுதி வரை ஒரு கோலில் தாக்குப் பிடித்த ஜோகூர் டாரூல் தாசிம் மீண்டும் ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன