புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > போட்டி விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை நிலைநாட்ட ரவாங் பிரதர்ஸ்சின் கால்பந்து போட்டி
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

போட்டி விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை நிலைநாட்ட ரவாங் பிரதர்ஸ்சின் கால்பந்து போட்டி

கோலாலம்பூர், பிப் 3-

ரவாங் பிரதர்ஸ்சின் கால்பந்து போட்டி எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணி தொடங்கி ரவாங், தாமான் கன்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 16 குழுக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் குழுக்கள் , வரும் 8ஆம் தேதிக்குள்வெ.200 செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டு குழுவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலதரப்பட்ட இயக்கங்கள் பல போட்டிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கால்பந்து துறையில் இளைஞர்களின் ஆர்வம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்ற ரவாங் பிரதர்ஸ் இந்தப் போட்டி நடந்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக வெ.2,000, இரண்டாம் நிலை பரிசாக வெ.1,000, மூன்றாம் நிலை பரிசாக வெ.500, நான்காம் நிலை பரிசாக வெ.500 வழங்கப்படும்.

இந்தப் போட்டிக் குறித்து மேல் விவரங்கள் பெறுவதற்கு தாபுங் (019-3228977), விமல் (010-2590476), சோமு (012-9057025), தர்வின் (014-7350877) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன