அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

5 ஆவது இடத்துக்கு முன்னேறியது மென்செஸ்டர் யுனைடெட் !

லண்டன், பிப்.4-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் , 1 – 0 என்ற கோலில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில், மென்செஸ்டர் யுனைடெட் அணியில் 100 ஆவது முறையாக களமிறங்கிய மார்கோஸ் ராஷ்போர்ட்,  அந்த அணியின் ஒரே வெற்றி கோலை அடித்தார். மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாக, ஒலே கன்னர் சோல்ஜ்ஸ்கார் பொறுப்பேற்றப் பின்னர், அந்த அணி 10 ஆட்டங்களில் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதிலும் 9 ஆட்டங்களில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்டம் தொடங்கியது முதலே தாக்குதல்களைத் தொடங்கிய மென்செஸ்டர் யுனைடெட் கோல் போடும் வாய்ப்பை நழுவ விட்டது. எனினும் எட்டாவது நிமிடத்தில் போல் பொக்பா அனுப்பிய பந்தை ராஷ்போர்ட் அழகாக கோலாக்கினார். அந்த ஒரு கோலுக்குப் பின்னர் லெய்செஸ்டர் சிட்டி தொடர் தாக்குதல்களை மேற்கொண்டது.

இரண்டாம் பாதி ஆட்டம் முழுவதும் லெய்செஸ்டர் சிட்டியின் ஆக்கிரமிப்பு இருந்தது. எனினும் கடைசி வரை போராட்டம் நடத்திய மென்செஸ்டர் யுனைடெட் 1- 0 என வெற்றி பெற்று லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன