அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 30 நாட்களில் 3 எல் கிளாசிகோ ஆட்டங்கள் ; உற்சாகத்தில் ரசிகர்கள் !
விளையாட்டு

30 நாட்களில் 3 எல் கிளாசிகோ ஆட்டங்கள் ; உற்சாகத்தில் ரசிகர்கள் !

மாட்ரிட், பிப்.4 –

பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதும் எல் கிளாசிகோ ஆட்டங்கள், 30 நாட்களுக்குள் மூன்று முறை நடைபெற இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்று விளையாடும் அணிகள் பார்சிலோனா, ரியல் மாட்ரிட். இரு அணிகளும் பரம எதிரிகள் போன்றுதான் கால்பந்து அரங்கில் மோதும். கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கு இரண்டு அணிகளுக்கு இடையே கடும் பனிப்போர் நடக்கும்.

பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு ‘எல் கிளாசிகோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எல் கிளாசிகோ ஆட்டத்தைக் காண உலகம் முழுவதும் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ‘கோபா டெல் ரே’ கிண்ண கால்பந்துயப் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதியில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் சுற்று ஆட்டம் வருகிற 6-ஆம் தேதி பார்சிலோனாவிற்கு சொந்தமான நூ கேம்ப் அரங்கில் நடக்கிறது. 2-வது ஆட்டம் ரியல் மாட்ரிட் அணியின் சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடக்கிறது.

அதன்பின் மார்ச்  3 ஆம் தேதி லா லிகா போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதுகிறது. 30 நாட்களுக்குள் மூன்று முறை எல் கிளாசிகோ  ஆட்டங்கள் நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன