அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – லிவர்பூலை நெருங்குகிறது மென்செஸ்டர் சிட்டி !
விளையாட்டு

பிரீமியர் லீக் – லிவர்பூலை நெருங்குகிறது மென்செஸ்டர் சிட்டி !

மென்செஸ்டர், பிப். 4-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை மெல்ல நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 –  1 என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி தாக்குதல் ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ 3 கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார். ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே , மென்செஸ்டர் சிட்டி தனது முதல் கோலைப் பெற்றது. ஆய்மிரிக் லப்போர்த்தே அனுப்பிய பந்தை செர்ஜியோ அகுவேரோ கோலாக்கினார்.

எனினும் 10 நிமிடங்களுக்குப் பின்னர், அர்செனல் தற்காப்பு ஆட்டக்காரர் லோரேன் கொசியன்லி ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் மீண்டும் அகுவேரோ போட்ட கோலின் மூலம், மென்செஸ்டர் சிட்டி  2-  1 என்ற கோலில் முன்னணி வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 61 ஆவது நிமிடத்தில் அகுவேரோ போட்ட கோல் மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணியுடனான புள்ளி வேறுபாட்டை மென்செஸ்டர் சிட்டி இரண்டாக குறைத்து கொண்டுள்ளது. எனினும் இன்று பின்னிரவு நடைபெறும் ஆட்டத்தில் லிவர்பூல், வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன