அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்! – இசைஞானி இளையராஜா அதிரடி
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்! – இசைஞானி இளையராஜா அதிரடி

சென்னை, பிப் 4-

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என இசைஞானி இளையராஜா குறிப்பிட்டுள்ள காணொளி சமூக தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தை போற்றும் வகையிலும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்கள் பிரமாண்டமாக நடந்தது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கமல்ஹாசன் மேடை ஏறிய போது இளையராஜாவை புகழ்ந்து பேசியதோடு, கண்மணி அன்போடு காதலன் எனும் பாடலைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் மேடையேறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி சுஹாசினி மணிரத்னம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்! இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார்! ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் எனக் கூறினார். உடனே இடைமறித்த இளையராஜா ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது அவர் மட்டுமே எனக் கூறிய போது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

மேடை கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? என நகைச்சுவையாக கேட்ட இளையராஜா என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டார். இந்த காணொளியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே இளையராஜா – ரஜினிகாந்த் இடையே நடந்த சரஸ்வதி- லெட்சுமி குறித்த உரையாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை முழுமையாக காண காத்திருப்பதாக ரசிகர்கள் தங்கள் சமூக தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக தளங்களில் அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு ரஜினிகாந்த் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என இளையராஜா கூறியதும் இப்பொழுது வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன