அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன
உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன

பேங்காக் பிப் 6-

மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பது தொடர்கதையாகி வருகின்றது.

அந்த வகையில், தாய்லாந்து பாங்காக்கில் நடந்த உலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளன.

சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி, கெடா,கூலிங் தமிழ்ப்பள்ளி ஆகியவை அந்த தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்திருக்கின்றன.

இந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் சார்ந்த படைப்புகளை திறன்பட முன்வைத்ததால் இவ்விரு பள்ளிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

25 நாடுகளிலிருந்து 700 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து மொத்தம் எட்டு தமிழ்ப்பள்ளிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இதில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதர தமிழ்ப்பள்ளிகளும் இந்த அறிவியல் புத்தாக்க போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளன.

பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி, வாகிசர் தமிழ்ப்பள்ளி, காஸ்டஸ்பில் தமிழ்ப்பள்ளி, பூலோ ஆகார் தமிழ்ப்பள்ளி, துன் அமினா தமிழ்ப்பள்ளி, யாஹ்யா ஆவால் தமிழ்ப்பள்ளி ஆகிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் வெள்ளிப்பதக்கத்தை வென்றன. ஆசிரியர்கள் விக்டர், உமா, சிவா, பரமேஷ் ஆகியோர் உறுதுணையாக இருந்து வெற்றிக்கு வழி வகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன