ஈப்போ, பிப் 7-

கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார்.

பள்ளிகளில் வழக்கமாக 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டு வந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி வரை அப்பொறுப்பில் இருந்தவர்கள் நிறுத்தப்பட்டு பகலில் மட்டும் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையாக இல்லை என்று கோப்பெங்கைச் சேர்ந்த ஆர் . மகேந்திரன் தெரிவித்தார்.

பள்ளிகளின் பாதுகாப்பிற்கும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு பாதுகாலர்களை பணியில் கல்வி அமைச்சு நிறத்தியது.

இன்று பகலில் மட்டும் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டு இரவில் பாதுகாலர்கள் இல்லை என்றால் திருட்டுச் சம்பவங்கள நிகழ வாய்ப்பு ஏற்படும் என்பதையும் பலர் கருத்தரைத்தனர் .

இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் குறைந்த மாணவர் உள்ள பள்ளிகளில் ஒரு நேரம் மட்டும் பாதுகாலர்களை நிறுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது்.

அதிக மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளிகளில் வழக்கம்போல்  பாதுகாலர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்று கூறப்பட்டது.

அதே சமயத்தில் சில பள்ளிகளில் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.