அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஈப்போ கிலேடாங் மலைப் பகுதியில் காடுகள் அழிப்பு! நடவடிக்கை எடுக்க மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் உத்தரவு
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஈப்போ கிலேடாங் மலைப் பகுதியில் காடுகள் அழிப்பு! நடவடிக்கை எடுக்க மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் உத்தரவு

ஈப்போ பிப் . 9-

ஈப்போ கிலேடாங் மலைப்பதியில் சட்டவிரோதமாக காடுகளை அளித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்கள ஆக்கிரமைப்பு செய்ய காடுகள் அழிக்கப்படுள்ளது தொடக்க விசாரனணயில் தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கை மேற்கொள்ள  அரசாங்கம் அனுமதியை வழங்கவில்லை .

இந்த நிலையில் அந்த கும்பல் எவ்வாறு சுமார் 10 எக்டர் கொண்ட அந்த நிலத்தில் உள்ள காடுகளை அழித்துள்ளது என்று பலரின் கேள்விக்கு ஆளாகியுள்ளது அரசாங்கம் .

இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாக கருதுவதோடு இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது.

மேல் குறிப்பிட்ட நிலத்தை சுத்தம் செய்து அதில் செம்பனை பயிர் செய்ய அவர்கள் திட்டமிட்டிருத்தனர்.

அரசாங்க நிலத்தை ஆக்கிரமைப்பு செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதின் வழி இதற்கு தீர்வு காணப்படும் என்றார் அவர்.

பேராக் சீன வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அமாட பைசால் செய்தியாளர்க்களில் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்வில் உரையாற்றிய அவர் , ஈப்போவிற்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ மற்றும் சீனாவிற்கான விமானச் சேவை அடுத்த மாதம் தொடங்கவிருக்கும்  தகவலைத் தெரிவித்தார்.

மேலும் இந்தச் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில மனதவள அமைச்சர் எம்.குலசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன