அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெம்பான் நிலத்திட்டம் பறிபோனது; மக்கள் அதிர்ச்சி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெம்பான் நிலத்திட்டம் பறிபோனது; மக்கள் அதிர்ச்சி

ஈப்போ, பிப் 9-

புந்தோங் கம்போங் செக்கடி இந்திய மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் என்ற தலைப்பில் இன்று 9ஆம் தேதி புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆதி் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய முண்ணனி ஆட்சியின்போது இவ்வட்டாரத்தில் வசித்து வந்த மக்களுக்கு பத்து காஜா வட்டாரத்தில் பெம்பான் பகுதியில் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்க்கான மேம்பாடு திட்டங்களுக்கு மஇகாவின்  பரிந்துறையின் பெயரில் முன்னாள் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் 5 மில்லியன் மானியம் ஒதுக்கிடு செய்தார்.

இதற்க்காக அன்றைய பேரா மாநில தலைவர்களான டான்ஸ்ரீ டத்தோ ஜி இராஜூ டான்ஸ்ரீ டத்தோ சு. வீரசிங்கம் மற்றும் தற்போதைய மாநில தலைவர் டத்தோ வ. இளங்கோ ஆகியோர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

நில மேம்பாட்டு திட்ட வேளைகள் முடிவடைத்துள்ள வேளையில், தற்போது  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் புந்தோங் வட்டார்த்தில்  அடுக்குமாடி வீடுகள் வழங்க இன்றைய பாக்காதன் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆதி் சிவசுப்பிரமணியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 நில அலுவலகம் கம்போங் செக்கடி மக்களுக்கு பெம்பான் பகுதியில் நிலம் வழங்குதாக உறுதி கடிதங்கள் வழங்கி அதற்க்கான பாரங்கள் பதிவு செய்து அதற்க்கான தொகையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது பெம்பான் பகுதியல் நிலம் வழங்க இயலாது என்றும் அதற்க்கு பதிலாக அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்படும் என்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கூறுவது ஏற்புடையதல்ல. தவிர்க்க முடியாத காரணத்தால் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்ன தவிர்க்க முடியாத காரணம் என்று அவர் விளக்க வேண்டும். காரணத்தை விளக்குவது அவரின் கடமையாகும்.

 *எனவே எக்காரணத்தை கொண்டும் தமது தொகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வழங்காமல் அதற்க்கு பதிலாக அடுக்குமாடி வீடுகள் வழங்கும் திட்டத்தை அவர் கைவிடவேண்டும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன