அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஈப்போ  ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேக விழா
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஈப்போ  ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேக விழா

ஈப்போ பிப் 11-
ஈப்போ நாட்டுக்கோட்டை நகரத்தார்  ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்புடன் நடைப்பெற்றது.

இவ்விழாவைக் காண திரளானோர் வருகை புரிந்தனர். தமிழகம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைமை குருக்கள் முனைவர் கே.பிச்சைக் குருக்கள் தலைமையில் இக்கும்பாபிஷேக விழா நடைபெற்றது்.

மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் உட்பட பலர் வருகை புரிந்தனர்.

பேரா மாநிலத்தில் வரலாற்றுப் பூர்வ ஆலயமாக விளங்கும் இந்த ஆலயம் சமய வளச்சிக்காக மட்டும் பாடுபடவில்லை மாறாக தமிழ் மொழியை காக்க ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் தமிழ்ப்பள்ளிக கூடத்தை உருவாக்கியது.

அதில் கல்வி கற்றோர் பலர் நாட்டில் பல்வேறு இடங்களில் சிறந்த தொழில் துறையில் இருந்து வருகிறார்கள்.

ஈப்போவில் ஜாலான் லகாட்டில் 1904 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1908ஆம் ஆண்டு அதன் முதல் கும்பாபிஷேக விழா கண்டது என்பது குறிப்பிடத்தக்கது்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன